வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (09:55 IST)

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

MBBS
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் அனுப்பும் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
அக்டோபர் 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் தகுதி பெற்ற மாணவர்கள் நவம்பர் 4 ஆம் தேதி கல்லூரிகளில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
மேலும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மருத்துவ மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva