புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (19:27 IST)

அறுவடை சமயத்தில் கஜா புயல்: இந்த ஆண்டு கரும்பு இல்லா பொங்கலா?

கரும்பு விவசாயிகள் கடந்த சில மாதங்களாக கண்ணும் கருத்துமாக பயிர் செய்த கரும்பு, சமீபத்தில் வீசிய கஜா புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி கிட்டத்தட்ட இருக்காது என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்டா பகுதியின் கரும்பு விவசாயி ஒருவர் கூறியபோது, ' கடந்த சில நாட்களுக்கு முன் வரை கரும்பு நன்கு வளர்ந்திருந்ததாகவும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கரும்பு அறுவடை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் கஜா புயல் வந்து தங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டதாகவும் கண்ணீர்மல்க கூறினார். மேலும் புயல் காற்று காரணமாக ஒட்டுமொத்த கரும்புகளும் அடித்து சென்று விட்டதால் விளைந்த கரும்புகள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு அனுப்பவும், சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பவும் திட்டமிட்டிருந்த கரும்புகள் அனைத்தும் பாழாகிவிட்டதாகவும், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டதாகவும் பல கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு சரியான நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.