1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (13:15 IST)

பேட்ட vs விஸ்வாசம் – பொங்கல் ரேஸில் பின்வாங்கப்போவது யார்?

2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்குகளை ஒதுக்குவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள் என்றால் ரஜினி, கமல், அஜித் ஆகியோர்தான். எப்போதும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது விநியோகஸ்தர்கள் அதிக அளவிலான திரையரங்குகளில் படத்தினை ரிலீஸ் செய்து கூடுமானவரை முதல் மூன்று நாட்களிலேயே வசூல் பார்த்து விட வேண்டும் என நினைப்பார்கள்.

அதன்படி பார்த்தால் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் திரையரங்குகள் ஒதுக்குவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் இரணடு படங்களும் தனித்தனியாக ரிலிஸானால் எல்லாத் தரப்பினருக்கும் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் எதாவது ஒரு படம் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்கலாம் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் படப்பிடிப்பு முடிந்து முன்பே பொங்கல் ரிலிஸ் என அறிவிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பேட்ட படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டதற்கு முன்பே முடிந்து விட்டதால் இப்போது திடீரென பொங்கல் வெளியீடு என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியான தங்கள் சர்கார் படத்தின் போது அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு மாபெரும் வசூலை நிகழ்த்தியது போல பேட்ட படத்தையும் மொத்த திரையரஙகங்களிலும் வெளியிடுவார்கள் என்பதால் விஸ்வாசம் படம் ரிலிஸ் தள்ளிப்போக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.