புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (10:27 IST)

சர்ச்சையை திசைதிருப்பதான் பேட்ட போஸ்டரா?

கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ராஜீவ் கொலை சம்மந்தப்பட்ட எழுவர் குறித்த கேள்விக்கு கூறிய பதிலால் சமூகவலைதளங்களில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் மீம் கிரியேட்டர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் எதாவது கண்டெண்ட் கொடுத்து செல்வது சமீபகால வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில்  பத்திரிக்கையாளர் ஒருவர் எழுவர் விடுதலைக் குறித்து தங்கள் கருத்து என்று கேட்ட கேள்விக்கு எந்த எழுவர் என்று அப்பாவியாக பதிலளித்தார்.

இது போதாதா நெட்டிசன்களுக்கு. அடுத்த சில நிமிடங்களிலேயே ரஜினியையும் அவரது அரசியல் வருகையையும் பற்றி துவைத்து தோரணம் கட்டிவிட ஆரம்பித்தனர். இதனால் அதிருப்தியடைந்த ரஜினி மறுநாள் காலையில் தன் வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னிடம் கேள்வி சரியாக கேட்கப்படவில்லை. அந்த ஏழுபேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பேரறிவாளன் பரோலில் வெளியேவந்த போது அவரிடம் தொலைபேசியில் 10 நிமிடம் பேசினேன். அவர்கள் விடுதலை ஆக வேண்டும் என்பதுதான் என்கருத்தும் விளக்கமளித்தார்.

இருந்தாலும் ஓயாத நெட்டிசன்கள் தொடர்ந்து ரஜினியை ட்ரோல் செய்து வந்தனர். இந்த மாத இறுதியில் ரஜினி நடிப்பில் 2.0 வெளியாக இருப்பதால் இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும் என சிலர் ஆருடம் கூறினர். ஏற்கனவே இதே மாதிரி சம்பவம் காலா படத்திற்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே அந்த சர்ச்சைகளை திசை திருப்பவே இன்று ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் புதிய போஸ்டர் வெளியிட்டு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.