1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 நவம்பர் 2018 (10:49 IST)

பொங்கலுக்கு அஜித்துடன் மோதும் சிம்பு

பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசத்துடன் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் மோத இருக்கிறது.
அஜித் நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதற்கிடையே டோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'அட்டாரினிட்டிக்கி தாரேதி' சூப்பர்  ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லைகா புரொடக்ஷன் தனது டிவிட்டரில் இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ”வந்தா ராஜாவாதான் வருவேன்” என பெயரிடப்பட்டிருக்கிறது.
 
இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் இப்படம் மோத இருக்கிறது, இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.