Daily Horoscope
✕

மேலும் ஒரு நகரத்திற்கு முழு ஊரடங்கு: அதிர்ச்சி தகவல்

Updated: திங்கள், 22 ஜூன் 2020 (16:57 IST)
மேலும் ஒரு நகரத்திற்கு முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை இந்த முழு ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்றும் இதில் ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் எந்தவிதத் தளர்வும் இன்றி முழுஊரடங்கு உத்தரவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இருப்பினும் தமிழகத்திலும் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பது துரதிருஷ்டமான ஒன்றே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்றும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட அதே நிபந்தனைகள் மதுரையில் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது மட்டுமின்றி மேலும் சில மாவட்டங்களுக்கும் இதே போன்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

எல்லாம் காட்டு

மின் தடையா? ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு...

2 முறை மரண தண்டனையை நிறைவேற்ற ஊசி போடும் சாகாத பெண்.. சட்ட வல்லுனர்கள் குழப்பம்..

சியாமி ஸ்மார்ட்போனின் முக்கிய மாடல் திடீர் விலை உயர்வு.. இந்தியாவில் மட்டும் ரூ.5000 உயர்வா?

நாடே உங்கள் பக்கம்!.. விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசிய மோடி!..

விலைவாசி ஏறிப்போச்சி!.. ரீல்ஸ் பாத்தா பசி போகுமா?!.. விஜய்க்கு ஸ்டாலின் கண்டனம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments