திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (07:10 IST)

முதல்நாள் முழு லாக்டவுன்: சென்னையில் 2000 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் 2000 வாகனங்கள் பறிமுதல்
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கின்போது வாகனங்களில் யாரும் செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விசுவநாதன் அவர்கள் எச்சரித்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி சென்னையில் வாகனங்களில் சென்றதாக 2000 வாகனங்கள் முதல் நாளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வாகனங்களில் சென்றது, முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தது, காரணம் இல்லாமல் தெருவில் சென்றது என மொத்தம் 2 ஆயிரத்து 346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான இதில் வட சென்னையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஜூலை 1ஆம் தேதி லாக்டோன் முடிந்தவுடன் வழங்கப்படும் என்று கமிஷனர் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார். சென்னையில் முதல் நாளே 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது