வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (14:47 IST)

தமிழகத்தில் தொடங்கியது கோடை: இன்றும் நாளையும் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம்!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் கோடை தொடங்கும் என்ற நிலையில் இன்று முதல் கோடை வெப்பம் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும் என்றும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று முதல் அதிக வெப்பம் ஏற்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தேவை என்று வீட்டை விட்டு மதிய நேரத்தில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது