1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 மே 2020 (12:35 IST)

வேதங்கள் ஓதி மது விற்பனையை தொடங்கி வைத்த குருக்கள்: புதுவை அட்ராசிட்டி

வேதங்கள் ஓதி மது விற்பனையை தொடங்கி வைத்த குருக்கள்
தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் திறக்கப்பட்ட நிலையில் புதுவையிலும் கடந்த வாரமே திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் புதுவையில் மதுக்கடைகளை திறக்கும் கோப்பில் கவர்னர் கையெழுத்திட தாமதமானதால் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் நேற்று அறிவித்து இருந்தார் 
 
இதனையடுத்து இன்று முதல் புதுவையில் காலை 10.30  முதல் மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று புதுவை அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை புதுவையில் அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. மதுவை வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவையில் மதுவுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட தமிழக விலைக்குத்தான் அங்கும் மதுவிற்பனை நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து யாரும் மதுவாங்க புதுவை செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
மேலும் ஒரு சில கடைகள் நீண்ட நாட்கள் கழித்து திறப்பதால் முறைப்படி வேதங்கள் ஓதி திறந்து வைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஒரு மதுக்கடையில் இன்று முறைப்படி வேதங்கள் ஓதி குருக்கள் திறந்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறத. பொதுவாக நல்ல காரியங்களுக்கு தான் வேதங்கள் வாசித்து, முறைப்படி மந்திரங்கள் ஓதி செய்வதுண்டு. ஆனால் மக்களின் உயிரைப் பறிக்கும் மதுக்கடைகளை திறப்பதற்கும் வேதம் ஓதுவதா? என சமூக வலைதள பயனாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்