புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:06 IST)

சட்டமன்ற வளாகத்திலும் மாஸ்க் கட்டாயம் : இன்று முதல் அமல்

Mask
சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இன்று முதல் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தமிழகத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்றும் சமீபத்தில் சுகாதாரத் துறை தெரிவித்தது 
 
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதல் அனைத்து எம்எல்ஏக்களும்  மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சட்டப்பேரவை ஊழியர்கள், அலுவலர்கள், பார்வையாளர்கள் உள்பட அனைவருக்கும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது