Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. கடைசி தேதி என்ன?

Written By Mahendran
Updated: திங்கள், 6 மே 2024 (12:35 IST)
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் பணியை தொடங்க உள்ளார்கள். 
 
ஏற்கனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம் தரப்படுவதாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தற்போது பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இன்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு செய்யலாம் என்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி தேதி வரை கால அவகாசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு?!.. வெளியான அப்டேட்!...

2027 ஜனவரி எய்ம்ஸ் மருத்துவமனை ஓப்பன்!.. மத்திய அரசு தகவல்!...

யூபிஐ கட்டணத்தால் மக்களுக்கும் வணிகர்களுக்கும் வந்த குழப்பம்.. மீண்டும் ரூபாய் நோட்டு பரிவர்த்தனையா?

கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை.. மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை...

சிறிய முதலீட்டில் டெலிகிராம் மூலம் ஆரம்பித்த ஸ்டார்ட் அப்.. இன்று 10 லட்ச ரூபாய் வருமானம்..

அடுத்த கட்டுரையில்
Show comments