விண்ணப்பித்த அடுத்த வினாடியே இபாஸ்: தமிழக மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை அமலில் இருந்த நிலையில் இன்று முதல் இபாஸ் தளர்வுகள் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இன்று முதல் இபாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்பேரில் இபாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உடனடியாக அனுமதி கிடைக்க தொடங்கியது
இதுகுறித்து இபாஸ் விண்ணப்பித்தவர்கள் கூறும்போது ஆன்லைனில் இபாஸ் விண்ணப்பித்த அடுத்த வினாடியே கிடைத்துள்ளதாகவும் இதனால் தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் விண்ணப்பித்த அடுத்த வினாடியே இபாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கி உள்ளதால் தமிழக மக்கள் முற்றிலும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் பேருந்து ரயில் போக்குவரத்து இல்லாததால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது