வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (07:29 IST)

H1B விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு

H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
 
2020ஆம் ஆண்டு இறுதி வரை H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை தடை செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது திடீரென இந்த தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை டிரம்ப் நிறுத்தியதால் இந்தியர்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இது தேர்தலில் தனது வெற்றியை பாதிக்கும் வகையில் டிரம்ப் மீண்டும் H1B விசாவில் தளர்வுகளை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த தளர்வு காரணமாக அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு சொந்த நாடு திரும்பியவர்கள் மீண்டும் அதே வேலைக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா வரும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் H -4 விசா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கவே இந்த தளர்வுகள் என்று டிரம்ப் கூறினாலும், தேர்தலை கருத்தில் கொண்டே டிரம்ப் இந்த தளர்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது