1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From tomorrow epass to all

நாளை முதல் புதிய இபாஸ் முறை: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும்!

இபாஸ்
தமிழகத்தில் இபாஸ் கிடைப்பது கடந்த சில மாதங்களாக பெரும் சிக்கலாக இருந்த நிலையில் நாளை முதல் புதிய இபாஸ் நடைமுறையின்படி விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் முறை அமல் செய்யப்பட்டது. இந்த இபாஸ் பெறுவதில் சமீபத்தில் தமிழக அரசு ஒருசில தளர்வுகளை அறிவித்தது என்பதும் இதன்படி நாளை முதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதன்படி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும், இபாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டையுடன் செல்போன் செல்போன் எண்ணையும் பதிவு செய்தால் உடனே இபாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்குவதற்கு பதிலாக இபாஸ் நடைமுறையை ரத்து செய்யலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
About Writer
siva