Daily Horoscope

39 வருடங்களுக்கு பின் முக ஸ்டாலின் இல்லாத சட்டசபை!.. திமுகவினர் சோகம்!..

Updated: திங்கள், 11 மே 2026 (11:36 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தேவையான ஆதரவு கிடைத்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன்பின் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனே உள்ளிட்ட தவெக அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதன் பின் இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது தவெக தலைவர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்றுகொண்டார். அவரைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பதவியேற்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்று சட்டப்பேரவை துவங்கிய நிலையில் முக ஸ்டாலின் அங்கே இல்லை.

1989க்கு பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை இன்று கூடியது திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 39 வருடங்களில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் இன்றி அவை நடப்பது இதுவே முதல் முறை என்பதால் திமுக எம்.எல்.ஏக்கள் முகத்தில் ஒருவிதமான சோகம் நிலவியது.
About Author
பாலகிருஷ்ணன்

எல்லாம் காட்டு

அரசு மருத்துவமனையில் ரூ.70,000 சம்பளம்.. ஆனால் பணிக்கு வராமல் காலேஜ் சென்ற டாக்டர்.. அதிரடி நடவடிக்கை..

ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து ஐஆர்சிடிசி சாதனை.. கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு..

விஜய் சேதுபதியை யாரும் தாக்கி பேச வேண்டாம்!.. சீனு ராமசாமி ஆதரவு...

ஓய்வு எடுக்க போகிறேன்.. திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர அன்புமணி விரும்பவில்லையா? கூட்டணியில் திடீர் குழப்பம்...

அடுத்த கட்டுரையில்
Show comments