1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (21:49 IST)

தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி- முதல்வர்

தூத்துக்குடி மாவட்டம், தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு  தமிழ் நாடு முதல்வர் முக. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் திருமதி. மாரியம்மாள், க/பேதங்கவேல் (லேட்) (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்தவேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா (லேட்) (வயது 49) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.