வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (13:24 IST)

பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர்

abuse
விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர் சுதாகர். இவர். இந்தக் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து, இரட்டை அர்த்தத்தில் பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பெண் தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து  கணவர் சப்இன்ஸ்பெக்டரிடம் சென்று எதற்கு என் மனைவிக்கு தொல்லை கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு உன்னை தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜியிடம் சென்று புகார் கொடுத்தனர். விசாரணை நடத்திய பின், சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.