திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (10:29 IST)

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி ஃபண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது என்பதும் ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
பல்வேறு இனங்களில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran