எடப்பாடியார் vs துரைமுருகன்: சட்டசபையில் முற்றிய விவாதம்!!
இன்று சட்டப்பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த பேச்சு எழுந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துரைமுருகனுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
டெல்டா பகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த பேச்சு எழுந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துரைமுருகனுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது,
எடப்பாடி பழனிச்சாமி, திமுக எம்பிக்கள் வேளான் மண்டலத்தை பெற்று தர வேண்டியது தானே? 3வது பெரிய கட்சி திமுக என்கிறீர்களே செய்ய வேண்டியது தானே என பேச,
இதற்கு பதிலடி தரும் வகையில், நாங்கள் மத்திய அரசுடன் எதிரும் புதிருமாய் உள்ளோம். நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள். வேளாண் மண்டலம் பற்றி சட்டபேரவையில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என எதிர்கேள்வி எழுப்பி விவாதம் காரசாரமாக முடிந்தது.