வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (16:41 IST)

ஆர்.கே.நகரில் வார்த்தை போர்: தினகரன் ஆதரவாளர்கள், வெல்லமண்டி நடராஜன் மோதல்!!

ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே நாளில் மூன்று வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அப்போது, தினகரன் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் மீட்பேன் என்று டிடிவி தினகரன் கூறிவருகிறார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 
 
இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சத்தமின்றி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மோதல் சூழ்நிலையை உருவாக ஒரே நேரத்தில் மதுசூதனன், தினகரன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். 
 
இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திமுக ஆதரவாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என ஒட்டுமொத்த தொண்டர்களும் அவரவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். 
 
அப்போது டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்ற போது, அதிமுக அணியை சேர்ந்த மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அங்கு வந்திருந்தார். அப்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கோஷங்களை எழுப்பினர். 
 
இதனை அறிந்த மதுசூதனின் ஆதரவாளர்கள் அந்த இடத்திற்கு வந்ததால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  உடனே போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.