1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (12:58 IST)

காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த அப்பா ! கல்லைப் போட்டு கொன்ற கொடூர மகன் !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டாவரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் ஆவார். இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். அதில்லாமல் அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அதனால் அவருக்கும் அப்பா சுந்தர் ராமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி அது  கைக்கலப்பாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த விக்னேஷ், கீழே கிடந்த கல்லை எடுத்து சுந்தரராமனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சுந்தரராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.