1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (14:13 IST)

தந்தையைக் கைது செய்யுங்கள் : 7 வயது மகள் ஆவேசம் ! நீங்களே பாருங்களேன்...?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷாதுல்லா. இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பேனியில் கூலி வேலை செய்து வருகிறார்.  இவருக்கு ஹனீப்பாஜாரா என்ற மகள் இருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் தன் தந்தை மீதே ஹனீப்பாஜாரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
 
'தேர்வில் நான் முதல் மதிப்பெண் பெற்றால் வீட்டில் கழிப்பறை கட்டி தருவதாக என் தந்தை வாக்குறுதி அளித்திருந்தார். எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நான் முதல் மதிப்பெண் எடுத்து வருகிறேன் .ஆனால் இதுவரை அவர் சொன்னபடி கழிவரை கட்டித்தரவில்லை . என்னை ஏமாற்றி வரும் அவரைக் கைது செய்யுங்கள். மேலும் கழிவரை கட்டித்தருகிறேன் என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்' இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
 
இதைக் கேட்ட சார்பு ஆய்வாளர் வளர்மதி அதிர்ச்சி அடைந்தார்.ஆனாலும் கழிவரை கட்ட துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு அரசு திட்டத்தில் கழிவரை கட்டித்தருவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
 
போலீஸிடம் தந்தை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் சொன்ன  மாணவியின் வீட்டுக்கு அரசாங்கத்தால் கழிவரை கட்டப்படுவது அந்தப் பகுதியில் இன்ப அதிர்ச்சியாகவே  பார்க்கப்படுகிறது.