1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (18:32 IST)

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பக்கம் தெரு நாய் கடித்து உயிர் இழப்புகள் ஏற்படுத்தும் நிலையில் ஆந்திராவில் வளர்ப்பு நாய் கடித்ததால் தந்தை மகன் ஆகிய இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வீட்டு செல்லப் பிராணி என்று கூறப்படும் நாய் வளர்ப்பதில் பலர் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் நிலையில் அந்த நாய் பொது மக்களை கடித்து குதறி வருவதும் சில சமயம் வீட்டில் உள்ளவர்களையே கடித்து வருவதும் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் நரசிங்கராவ் என்ற 59 வயது நபர் தனது வீட்டில் நாய் வளர்த்த நிலையில் அந்த நாய் திடீரென அவரையும் அவரது மகன் பார்கவ் என்பவரையும் கடித்தது.
 
நாய்க்கு கடித்ததை இருவரும் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்து உள்ள நிலையில் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் நாய் திடீர் என இறந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இருவருக்கும் ரேபிஸ் வைரஸ் என்ற நோய் பரவியதாகவும் இருவருக்கும் அந்த வைரஸ் மூளைக்கும் பரவியதாகவும் தெரிய வந்தது. இதனை அடுத்து தொடர் சிகிச்சை அளித்தும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran