செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , சனி, 22 ஜூன் 2024 (12:25 IST)

கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக அரசை கண்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினர்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது 
 
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை பதவி விலக கோரி அவரது உருவ பொம்மையை எரிக்கும் என்றதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் மு. க ஸ்டாலினின் உருவ பொம்மையை இருக்க முயன்றனர் 
 
பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறிமுதல் செய்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர் 
 
தொடர்ந்து பதவி விலகு பதவி விலகு முதலமைச்சரே பதவி விலகு என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.