நாடகம் பார்த்த குடும்பம்… நள்ளிரவில் வெடித்த டிவி !
தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துவிட்டு அசதியிஇல் அதை அணைக்காமல் தூங்கிய வீட்டில் டிவி வெடித்துச் சிதறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.
இவர்கள் வீட்டில் தினமும் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பது வழக்கம். இதேபோல் நேற்று இரவும் வீட்டி அனைவரும் சீரியல் பார்த்துவிட்டு டிவிஐ நள்ளிரவில் அணைக்காமல் விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இவர்கள் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் பயங்கரச் சத்தம் பேச்சு எல்லோரும் பதறியடித்து விழித்தெழுந்தனர்.
அப்போதுதன் டிவி வெடித்துச் சிதறியது அவர்களுக்கு தெரிந்தது. அதேபோல் அருகிலுள்ளோரும் அங்கு கூடிவிட்டனர். அப்போது வசந்தகுமாரின் வீட்டில் பரவிய தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.