1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (23:33 IST)

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… #VanakkamDaMappilei டிரெண்டாகும் ஹாஸ்டேக்

ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகிவரும் வணக்கம்டா மாப்ள என்ற படத்தில் நடிகர் தனுஷ்  பாடியுள்ள பாடல் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிவி. பிரகாஷ்குமார், தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியின் குசேலன் படத்திற்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.

பின்னர் இயக்குநர் விஜய்யின் கிரீடம், மதராஸப்பட்டினம் போன்ற படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.

இவர் இசையமைப்பாளராக இருந்தபடியே நடிகராகவும் களமிறங்கி ரசிகர்கள் மனதில் வெற்றி ஹீரோவாக வலம் வருகிறார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் அகிலம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தை ஒருகல் ஒரு கண்ணாடி பட புகழ் எம்.ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அம்ரிதா நடிக்கவுள்ளார். டேனியல் இதில் காமெடி ரோல் செய்யவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு வணக்கம் டா மாப்ள என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் Tata Bye Bye  என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  #GVPrakash #Amritha #TeamGVPஇதுகுறித்து ரசிகர்கள், ரொம்ப நாள் கழிச்சு அண்ணனோட @dhanushkraja குரல் ல 'Tata Bye Bye' பாடல் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு @gvprakash Bro. Thankyou எனப் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.