போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை!-கூட்டுறவுத்துறை பதிவாளர்
போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு, நலத்திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ரேசன்கார்டு உள்ளவர்களுக்கு விநியோகிக்காமல், போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மண்டல இணைபதிவாளர் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த முறைக்கேடுகளை கண்காணிக்காத ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Edited by Sinoj