வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (22:15 IST)

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்கும் எலான் மஸ்க்!?.. வைரலாகும் புகைப்படம்

elan twitter
உலகின் டாப் பணக்கார்களின் முதலிடத்தில்  உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா என எலக்ற்றிக் கார்  நிறுவனம், விண்வெளிக்குச் செல்லும் ராகெட்டுகள் என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில், இவர், டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார் என்பதும் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார்.

இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், டுவிட்டரை 54.20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த வாரம் எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நாளைக்குள்( அக்-28)   இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில்,  எலான் தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், டிவிட்டரின் தலைமை அதிகாரி தான் என்று குறிப்பிட்டு, ‘’டுவிட்டர் தலைமையகத்தில் நுழைகிறது’’ என்று தெரிவித்திருந்தார். மேலும், முகம் கழுவும் தொட்டி  ஒன்றை அவர் சுமந்து கொண்டு செல்லும் வீடியோவும் வைரலானது. இதன்படி இனிமேல் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் மூழ்கப் போகிறார் என நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் காஃபி பாரில் அலுவலர்களுடன் அவர் பேசிய புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj