1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (14:04 IST)

உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்- கவிஞர் வைரமுத்து

vairamuthu
சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தன் டிவிட்டர் பக்கத்தில், உலக நாகரீகத்தை ஒழுங்குபடுத்துங்கள் என்று -எலான் மஸ்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் டாப் பணக்காரர்களின் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் நீதிமன்ற கெடுவிதிப்பு தேதியான நேற்று டிவிட்டரை வாங்கியதுடன்,  அதன் சிஇயோ  மற்றும்  நிதிப்பிரிவு அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.

அடுத்ததாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்மம் கக்கும் கருத்துகளைப் பதிவிடுவதாகக் கூறி, சில மாதங்களாக அவர்  டுவிட்டர் கணக்கு முடக்கப் பட்டிருந்த நிலையில் அது நேற்று மீண்டும் சேர்க்கப்பட்டார். இதற்கு டிரம்ப் எலான்ஸ் மஸ்கிக்கு  நன்றி கூறியிருந்தார்.


புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளததாக கூறி வரும் எலான் மஸ்க் மிக வலிமையுள்ள சமூகவலைதளமாகப் பார்க்கப்படும் டிவிட்டரில் என்னென்ன  கொள்கைகள் கொண்டுவரப்போகிறார் என்பதைக் காண நெட்டிசன் கள் ஆர்வமுடன் உள்ளனர்.

போலிக் கணக்குகள் அதிமுள்ளதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் அவர்  நீண்ட இழுபறியாக இதை வாங்குவதற்குத் தயக்கம் காட்டிய நிலையில், இனி இதை முறைப்படுத்துவார் எனத் தெரிகிறது.


உலக நிகழ்வுகளை  டிவிட்டரில் வரும் ஹேஸ்டேக்கை பார்த்து தெரிந்துகொள்ளும் சூழல் உள்ள நிலையில், பல்வேறு பிரபலங்கள் டிவிட்டரில் புதுமைகள் செய்யவுள்ள எலான் மஸ்கிஸ்கு தங்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தன் டிவிட்டர் பக்கத்தில், உலக நாகரீகத்தை ஒழுங்குபடுத்துங்கள் என்று -எலான் மஸ்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், ‘’

ட்விட்டர் நிறுவனத்தின்
புதிய அதிபர்
எலான் மஸ்க் அவர்களே!

இந்தியாவின்
தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்

வலதுசாரி இடதுசாரி
இரண்டுக்கும்
ட்விட்டர் ஒரு களமாகட்டும்

ஆனால்,
பொய்ச் செய்திக்கும்
மலிந்த மொழிக்கும்
இழிந்த ரசனைக்கும்
இடம்தர வேண்டாம்

உலக நாகரிகத்தை
ஒழுங்கு படுத்துங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நல்ல கருத்துகளை பதிவிட்டு வருவதற்காக அண்மையில் டிவிட்டரில் இணைந்த  நடிகர் சீயான் விக்ரமை டுவிட்டர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.