எம்பி சீட் யார் யாருக்கு? அதிமுக, திமுக பலே ப்ளானிங்...
அதிமுக மற்றும் திமுக சார்பில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு செல்வது யார் யார் என்ற தகவல் யூகங்கள் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி, அதிமுக ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றியது. இந்நிலையில், மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த 6 எம்பிக்களை தேர்ந்தெடுக்க வரும் ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் தலா மூன்று எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதன்படி, அதிமுகவிற்கு உள்ள 3 எம்பி சீட்டில் ஒன்று பாமகவிற்கு வழங்கப்படும். மீதமுள்ள இரண்டு சீட்டிற்கு தம்பிதுரை, கேபி முனுசாமி, கோகுல இந்திரா, மைத்ரேயன் மற்றும் அன்வர் ராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.
அதேபோல், திமுகவை பொருத்த வரை கூட்டணி ஒப்பந்தத்தின் படி ஒரு சீட் மதிமுகவிற்கு சென்றுவிடும். மீதமுள்ள இரண்டிற்கு தொமுசவின் சண்முகம், வழக்கறிஞர்கள் என்.ஆர் இளங்கோ, கே.எஸ் ராதாகிருஷ்ணன், ஈரோடு முத்துசாமி ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.