வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (08:22 IST)

எங்கள் தளபதி தங்க தமிழ்செல்வன்!! அடேங்கப்பா இந்த சீன் லிஸ்டுலயே இல்லயே...

தங்க தமிழ்செல்வன் அமமுக-வில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் கூறிய நிலையில், திவாகரன் அணி தங்க தமிழ்செல்வனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. 
 
தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். 
 
எனவே அடுத்து தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவாரா அல்லது திமுகவில் இணைவாரா என்பதுதான் கேள்வியாக இருந்தது. ஆனால், இதில் சற்றும் எதிர்பாராத விதமாக திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து தங்க தமிழ்செல்வனுக்கு ஆதரவு கரம் கிடைத்துள்ளது. 
ஆம், அமமுகவில் இருந்து விலகிய தேனி கர்ணன் திவாகரன் துவங்கிய அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்துள்ளார். தேனி கர்ணன், தங்க தமிழ்செல்வன் பற்றி கூறியுள்ளதாவது, தேனியில் எங்கள் தளபதியாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். நான் அமமுக தலைமை செயல்பாடு பிடிக்காமல் அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்துள்ளேன்.
 
அதேபோல் தங்கத் தமிழ்ச்செல்வனையும் சந்தோஷமாக எங்கள் கட்சியில் இணைக்கப்போகிறோம். அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் திவாகரன், ஜெய் ஆனந்த் ஆகியோர் தங்க தமிழ்செல்வனை அழைக்க தயாராக இருக்கிறார்கள். 
 
சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் வரை எங்களுடன்தான், தங்கத் தமிழ்ச்செல்வன் இருப்பார். சசிகலா வரும் வரை எங்கள் கட்சியிலேயே அவர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.