திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (08:22 IST)

கைது செய்யப்பட்ட மணிகண்டன்... சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று காலை பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
மெலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது.பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர் என வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.