1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (11:37 IST)

நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய முடிவு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களால் தான் மூன்று முறை கர்ப்பம் ஆனதாகவும், அந்த கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக முன்னாள் அமைச்சர் கலைக்க வலியுறுத்தியதாகவும் நடிகை சாந்தினி சமீபத்தில் காவல்துறை புகார் அளித்திருந்தார்
 
இதனை அடுத்து சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர் 
 
கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் திரட்ட படுவதாகவும் வாட்ஸ்அப் வீடியோ ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.