Daily Horoscope
✕

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி: ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகள்..!

Written By Siva
Updated: வியாழன், 2 மார்ச் 2023 (18:28 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி: ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன என்பதன் தெரிந்ததே. இந்த நிலையில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்ற வாக்குகள் 1,10,556 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 65,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் 
 
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தாய்மாமன் தங்கம் திட்டத்தை அடுத்து அண்ணன் சீர்.. மணப்பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம்...

வெற்றி பயண திட்டம் எதிரொலி!.. தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்வு..

வயதானவர்கள் வாக்களிப்பதில் சிக்கல்.. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் குளறுபடி!...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!. 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்..

சென்னையில் இன்று சில மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments