1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dispute while playing cards Boys who killed rowdy arrested

சீட்டு விளையாடும்போது தகராறு....ரவுடியை கொன்ற சிறுவர்கள் கைது!

Boys arrested for killing rowdy
சென்னையில் சீட்டு விளையாடும்போது, சிறுவர்கள் ஒரு ரவுடியைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 5 வது வீதியில் வசிப்பவர் சண்முகம்923). இவர் மீது காவல் நிலையத்தில் 9 வழக்குகள் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி  அவர் வண்ணாரப்பேட்டைக்குச் சென்றார். அங்கு, சிறுவர்கள் சிலர் ஹண்டிங் மைதானத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை நெருங்கிய சண்முகம், அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால், சண்முகத்திற்கும்,சிறுவர்களுக்கும் இடைய வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த சண்முகம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார்.

உடனே சிறுவர்கள் கற்களை எடுத்து சண்முகத்தை தாக்கினர்.கீழே சரிந்து விழுந்த சண்முகத்தின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு  கொலை செய்துவிட்டு, சிறுவர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறிதிது, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையான சண்முகத்தின்  உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில். 19 வயதுடைய 3 பேர், ஆளா, இளங்கோவன் ஆகிய இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளானர்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்