புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (17:16 IST)

எடப்பாடி பழனிசாமி, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாஞ்சில் சம்பத்

nanjil
ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியிட்டது என்பதும் அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் போராடி அந்த சின்னத்தை பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் ஓபிஎஸ் அணியை புறந்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி அணி ஓபிஎஸ் மற்றும் பாஜக துணை இல்லாமலே வெற்றி பெறுவோம் என்றும் அதன் கட்சி தலைவர்கள் சிலர் கூறி வந்தனர்.
 
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி பிரச்சாரம் செய்தபோதிலும் மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை அதிமுக வேட்பாளர் பெற்றுள்ளார். 
 
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து கூறிய நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran