இது ஜெயலலிதா சிலை என்று போர்டு வையுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய திருவுறுவ சிலை அதிமுக தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
இந்த நிலையில் நெட்டிசன்களின் கிண்டலை அடுத்து ஜெயலலிதா சிலையின் முக அமைப்பு மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் இன்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 'அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு அருகே இது தான் ஜெயலலிதா சிலை என போர்டு வைக்க வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார். அவரது விமர்சனம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.