செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (17:18 IST)

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: ஈபிஎஸ் அதிரடி

அமைச்சர் உதயநிதி 1.10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என இழப்பீடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.  
 
சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் தன்னை அவர் விமர்சனம் செய்ததாகவும் தன்னை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் அமைச்சர் உதயநிதி இழப்பீடாக தனக்கு ரூபாய் 1.10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran