வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (14:36 IST)

என்கவுண்டர் என்பது சட்டத்திற்கு புறம்பானது- கார்த்திக் சிதம்பரம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் காக்கிச்சட்டை போட்ட கூலிப்படையாக மாறிவிடக்கூடாது என்றவர்
காவல்துறையே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்துவிட்டால் நீதித்துறை எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார் கார்த்திக்சிதம்பரம்.
 
கூட்டணியால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் அது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு  கருத்து கூறுவதில் எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது என்ற கார்த்தி சிதம்பரம், காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய  நீரை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை, அதற்கு எல்லா விதத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றவர் மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வரும் மின்வாரியத்தின் கடன் சுமையை குறைக்காத வரை மின் கட்டண உயர்வை தடுக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.