1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , புதன், 5 ஜூன் 2024 (10:22 IST)

ஆணவத்தில் பேசியவர்களுக்கு தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது- கார்த்திக் ப.சிதம்பரம்!

சிவகங்கை  நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் கார்த்திக் ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார். 
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் 
4,27,677 வாக்குகள் பெற்றார். 
 
மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை விட 2,05,664 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 
அவருக்கு, சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோர் உடன் இருந்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் 40 தொகுதிகள் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என்றார். மேலும் தனது வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டவர், 300 முதல் 400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.