மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் !
மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மற்ற மாநிலத்தில் எப்படி என்று தெரியாது. ஆனால் தமிழகத்தில் மின்பழுது ஏற்பட்டாலோ அல்லது புதைவடங்களை சரிசெய்வதாக இருந்தாலோ அதை வந்து சரி செய்யும் மின் ஊழியர்கள் கேட்கும் பணத்தை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்நிலையில் மின் தடை, புதை வடங்களை சரிசெய்ய மின்வாரிய ஊழையர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், மாறாக 94458 57593 , 94458 57594 ஆகிய புகாரளிக்கலாம் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.