திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:07 IST)

மீண்டும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீவிபத்து: திருப்பூரில் பரபரப்பு!

scooters battery
மீண்டும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீவிபத்து: திருப்பூரில் பரபரப்பு!
பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின்சாரம் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்தது என்பதும் தந்தை-மகள் பலியான சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திருப்பூரில் இன்று சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்தது. அவர் உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை மட்டும் தனியாக கழட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
 
 தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்தை சந்தித்து வருவது அந்த ஸ்கூட்டர்கள் மீது இருக்கும் நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து குலைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது