1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சொந்த செலவும் அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர்: பேரூராட்சி தலைவர் அசத்தல்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி என்ற பகுதியைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் 17 கவுன்சிலர்களுக்கு தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கித் தந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவராக சமீபத்தில் திமுகவின் கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த தொகுதியில் உள்ள அதிமுக கவுன்சிலர் வசதியானவர் என்பதால் அவரை தவிர மற்ற மற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் தனது சொந்த செலவில் ஸ்கூட்டர்  வாங்கி கொடுத்துள்ளார் 
அதுமட்டுமின்றி அந்த ஸ்கூட்டரை பயன்படுத்த மாதம் 10 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்
 
பேருராட்சி தலைவரின் இந்த அறிவிப்பை அடுத்து கவுன்சிலர்கள் 17 பேரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது