வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (09:17 IST)

மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்குமா பாமக ? – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !

பாமகவின் மாநிலக் கட்சி அந்தஸ்தைத் திரும்ப பெறுவதற்கான நோட்டிஸை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருக் கட்சி மாநிலக் கட்சியாக தொடர்ந்து செயல்பட சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு தகுதிகளையும் பாமக கடந்த சட்டமன்றத் தேர்தலில் இழந்தது. அப்போதே அதன் மாநிலக் கட்சி அந்தஸ்து நீக்கப்படும் என சலசலப்புகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது பாமகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அந்த நோட்டீஸில் ‘ஏன் உங்கள் கட்சியின் மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.  இதில் பாமகவோடு ராஷ்டிரிய லோக் தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநாயகக் கூட்டணி, மிசோரம் மக்கள் மாநாடு ஆகியக் கட்சிகளுக்கும் இதேப்போல நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேப்போல மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் தேசிய கட்சி உரிமையை நீக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.