ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (08:02 IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்துவது ஆகியவற்றுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களும் அதே போல் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களும் மொத்தம் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் இந்த முகாம்களில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், இடமாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சிறப்பு முகாம்கள் நடைபெறும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வருபவர்களும் தேர்தல் ஆணையர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது