1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:25 IST)

அன்பு சகோதரர் விஜயகாந்த் குணமாக வேண்டும்: ஈபிஎஸ் வாழ்த்து!

vijayakanth
அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் 
 
அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர்,அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில்  பரிபூரண நலம்பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.