வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (11:24 IST)

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு!

vijay kushboo
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு!
தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ‘ சகோதரர் விஜய் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் உற்சாகம் மகிழ்ச்சி வெற்றி மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிறந்த நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் 
 
மேலும் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் ’வில்லு’ ’மின்சார கண்ணா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது