அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி..!
அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார் என்றும் ஆனால் நான் அந்த தொகுதிகள் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை என்பது எடப்பாடி பழனிச்சாமி பதிலாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் இழுபறி நிலையில் தான் பாஜக ஆதரவு கொடுத்தது என்பது தெரிந்ததே.
Edited by Siva