வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (13:30 IST)

3 ஆம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு கவனிப்பு: எடப்பாடியார் அதிரடி!!

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 
 
அதன்படி ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் கூடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிற்கே வந்து டோக்கனுடன் நிவாரண பணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரி இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.