புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (11:14 IST)

தமிழகத்தில் கொரோனா வார்டில் மேலும் இருவர் பலி!

தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவர்கள் இருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மற்றும் கடலூரில் கொரோனா அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியர் என தெரிய வந்துள்ளது. 52 வயதான அந்த நபருக்கு காசநோய் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரது இரத்த மாதிரி ஆய்வுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆய்வு முடிவுகள் வெளியானதும் அவர்கள் இறப்பிற்கு கொரோனா காரணமா என்பது குறித்து தெரிய வரும்.